புதைக்கப்பட்ட புரோட்டா மாஸ்டர் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை

புதைக்கப்பட்ட புரோட்டா மாஸ்டர் உடல்  தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை
X

காட்சி படம் 

வீரபாண்டி சவளப்பட்டியில் இறந்த வாலிபரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

தேனி வீரபாண்டியை சேர்ந்த புரோட்டா மாஸ்டர் கன்னிச்சாமி, 25. இவர் கடந்த ஏப்., 21ம் தேதி வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு வரும் வழியில் தவறி தனது வீட்டு வாசல் முன்பு குழாய் தடுக்கி விழுந்தார். அப்படியே வீட்டிற்குள் போய் துாங்கியவர் இறந்து போனார்.

அன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஏப்., 23ம் தேதி தனது தம்பி சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கன்னிச்சாமியின் அண்ணன் புரோட்டா மாஸ்டரான வேலுச்சாமி வீரபாண்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் சரவணபாபு, பழனிசெட்டிபட்டி காவல் ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் உமாமகேஸ்வரி, மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கன்னிச்சாமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு சுடுகாட்டிலேயே மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

பின்னர் மீண்டும் புதைக்கப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!