வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட பெண்கள், பரபரப்பு

வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகம் முற்றுகையிட்ட பெண்கள், பரபரப்பு
X

தேனி மாவட்டம் வருஷ நாடு ஊராட்சியில் நூறுநாள் வேலை திட்டத்தில் பணி நேரம் குறித்த விவகாரத்தில் பணியாளர்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தேனிமாவட்டம் வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகத்தை, நூறு நாள் பணியாளர்கள், பணி நேரம் நீட்டிக்கப்பட்டதை கண்டித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் முழுவதும் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி நேர மாறுதல் கொண்டு வரப்பட்டது. இதுவரை காலை ஒன்பது மணிக்கு பணித்தளத்திற்கு வரும் மக்கள், மதியம் இரண்டு மணி வரை வேலை செய்தனர்.

இனிமேல் காலை எட்டு மணிக்கே பணித்தளத்திற்கு வர வேண்டும். மதியம் ஒரு மணி நேரம் ஓய்வு எடுக்கலாம். மாலை ஐந்து மணி வரை வேலை செய்ய வேண்டும் என பணி நேரத்தில் பல்வேறு மாறுதல்களையும் புதிய கட்டுப்பாடுகளையும் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

தற்போது மாவட்ட நிர்வாகம் கொண்டு வந்துள்ள புதிய திட்டம் எங்களுக்கு கடும் நெருக்கடியினை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று வேலைக்கு வந்த பொதுமக்கள் வருஷநாடு கிராம ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரசம் பேசி, பொதுமக்களின் கருத்துக்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் புறப்பட்டு சென்றனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil