விவசாயிகள் பெயரில் புரோக்கர்கள் கலெக்டரை குழப்புவதாக அதிகாரிகள் புகார்
பைல் படம்.
தேனி மாவட்டத்தில் எதற்கெடுத்தாலும் தலைவலி. அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஏதாவது ஒரு குளறுபடி உள்ளதாக தவறான புகார் எழுப்பி போராட்டம் நடத்துவதை சிலர் வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதாவது சிலர் பப்ளிசிட்டிக்காக போராட்டம் நடத்துகின்றனர். சிலர் கமிஷன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் போராட்டம் நடத்துகின்றனர். சிலர் பல பெரிய வியாபாரிகளின் புரோக்கர்களாக செயல்படுகின்றனர். இப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு ஏதாவது ஒரு உள்நோக்கம் இருந்து கொண்டே உள்ளது.
இதனால் உண்மையாகவே மக்கள் பிரச்னைக்கு, விவசாயிகளின் பிரச்னைக்கு போராட வருபவர்களையும் சந்தேகிக்க வேண்டி உள்ளது. சிலர் கலெக்டர் அலுவலகம் வரை ஊடுருவி விட்டனர். கலெக்டரை சந்தித்து தங்களை போராளிகளாக காட்டிக் கொண்டு ஏதாவது தவறான தகவல்களை சொல்லி விடுகின்றனர்.
கலெக்டரும் அது பற்றி விசாரிக்க அரசுக்கு உத்தரவிடுகிறார். விசாரணையில் கலெக்டருக்கு கிடைத்த தகவல் பொய் என தெரியவருகிறது. இதனால் கலெக்டர் மற்றும் அதிகாரிகளின் நேரம் வீணடிக்கப்படுகிறது. ஏற்கனவே அரசு பணிகளில் காலிப்பணியிடங்களால் இருப்பவர்களின் பணிச்சுமை அதிகம் உள்ளது. இதில் சிலர் செய்யும் செயல்கள் கலெக்டர் உட்பட அதிகாரிகள் பலரது கவனத்தையும், நேரத்தையும் வீணடிக்கும் வகையில் உள்ளது.
இது பற்றி நாங்கள் நேரடியாகவே கலெக்டரிடம் கூறி விட்டோம். இதனால் சந்தேகப்படும் நபர்கள் அதாவது விவசாயிகளின் பெயரில் தவறான தகவல் தரும் நபர்கள் பட்டியலை தாருங்கள். அவர்களை பற்றி உளவுத்துறை மூலம் விசாரித்து உண்மைத்தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்கலாம் என ஒரு மாவட்ட அதிகாரியே மற்ற உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த விசாரணைக்கு அதாவது உளவுப்பிரிவு மூலம் சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கும் விசாரணைக்கு விரைவில் கலெக்டரிடம் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu