விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை உடைத்து போடும் குடிமகன்கள்

விவசாய நிலங்களில் மதுபாட்டில்களை உடைத்து போடும் குடிமகன்கள்
X

குடிமகன்கள் உடைத்துப் போட்டுள்ள மதுபாட்டில்கள்

தேனி மாவட்டத்தில் விவசாய நிலங்கள், பாதைகளில் மதுபாட்டில்களை உடைத்துப்போடும் குடிமகன்களால் விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்

தேனி மாவட்டத்தில் விவசாய விளைநிலங்களிலும், விளைநிலங்களுக்கு செல்லும் பாதைகளிலும் குடிமகன்கள் மதுபாட்டில்களை உடைத்து போடுவதால், அந்த நிலத்தில் நடக்கும் விவசாயிகள் காலில் காயமடைந்து பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் டாஸ்மாக் கடைகளை திறந்துள்ள தமிழக அரசு பார்களை திறக்கவில்லை. இருப்பினும் பல இடங்களில் அனுமதியின்றி பார்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால் பார்களில் விற்கப்படு்ம உணவு வகைகள், தண்ணீர் பாட்டில், டம்ளர் இவற்றின் விலை அதிகம் என்பதால் குடிமகன்களில் பெரும் பகுதியினர் மதுபாட்டில்களை வாங்கிக் கொண்டு, விவசாய நிலங்களுக்குள்ளும், நிலங்களுக்கு செல்லும் பாதைகளிலும் ஒதுங்கி விடுகின்றனர். அவர்களுக்கு தேவையான தின்பண்டங்களை ஒரு பையில் வாங்கிக் கொண்டு இருட்டான இடத்திற்கு சென்று அமர்ந்து மது அருந்துகின்றனர்.

போதை தலைக்கு ஏறும் வரை கவனமாக நடந்து கொள்ளும் குடிமகன்கள், போதை ஏறியதும் தாறுமாறாக நடந்து கொள்கின்றனர். குறிப்பாக மதுபாட்டில்களை உடைத்து எறிகின்றனர். இப்படி உடைக்கப்பட்ட மதுபாட்டில்களின் துண்டுகள் விவசாய நிலங்களின் பாதைகளிலும், தண்ணீர் வரும் ஓடைகளிலும், விவசாய நிலங்களிலும் சென்று விழுந்து விடுகின்றன.

இவற்றை கவனிக்காமல் அதிகாலையில் வேலைக்கு செல்லும் விவசாயிகள் இந்த கண்ணாடி துகள்களை மிதித்து பெருமளவில் காயடைந்து வுிடுகின்றனர். இப்படி காலில் காயமடைந்து தினமும் பத்து பேராவது தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு வருகின்றனர். மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் இதே போன்ற பிரச்னை இருப்பதாக டாக்டர்களும் புலம்பிக் கொண்டே சிகிச்சை அளிக்கின்றனர்.

இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்ப

Tags

Next Story
ai marketing future