தோட்டத்தில் பூச்சி மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு

தோட்டத்தில் பூச்சி மருந்தை நுகர்ந்த சிறுவன் உயிரிழப்பு
X
தோட்டத்தில் பூச்சி மருந்து தெளிக்கும் போது அதன் வாசனையை நுகர்ந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

பூச்சி மருந்து தெளிக்கும் போது தோட்டத்திற்கு உள்ளே சென்ற சிறுவன் அதன் வாசனையை நுகர்ந்ததால் உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிபட்டி அருகே நாகலகவுண்டன்பட்டியை சேர்ந்த மல்லிகா( 41 )என்பவரது மகன் துர்கேஷ்( 9.) இவர் நேற்று தனது தாயுடன் கொட்டை முந்திரி தோட்டத்திற்கு சென்றபோது அங்கு செடிகளுக்கு பூச்சி மருந்து தெளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சிறுவன் துர்கேஷ் மருந்து அடித்த செடிகளுக்கு அருகே சென்று விளையாடியபோது பூச்சி மருந்து நெடியை அதிகமாக நுகர்ந்ததால் மயக்கமடைந்து விழுந்தான். உடனே அவனை தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான். ஆண்டிபட்டி இன்ஸ்பெக்டர் சந்திரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!