தேனியில் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு
தேனியில் மதுரை ரோட்டோரம் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
தேனி பஜாரில் தீபாவளி விற்பனை தொடங்கியுள்ள நிலையில், திருட்டுக்களை தடுக்க கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் மக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம மக்கள் தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தேனிக்கு தான் வருகின்றனர். இதனால் பண்டிகை காலங்களில் தேனியில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த ஆண்டு நேற்று இரவு வரை கூட்டம் டல்லாகவே இருந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், பஜாரில் கூட்டம் வரும் வாய்ப்புகள் அதிகம். தவிர தீபாவளிக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே உள்ளதால், இன்று முதல் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த கூட்ட நெரிசலை திருடர்களும் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. திருடர்கள் மட்டுமல்ல, திருடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே தேனி, பெரியகுளம், போடி, சின்னமனுார், கம்பம், கூடலுார் ஆகிய ஆறு நகராட்சிகளிலும் போலீசார் சாதாரண உடைகளிலும் கண்காணித்து வருகின்றனர். அனைத்து நகராட்சிகளிலும் ஆண்டிபட்டி, உத்தமபாளையம் உள்ளிட்ட பெரிய பேரூராட்சிகளிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இருநுாறுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் முழு நேரமும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu