தேனியில் விவசாயி மீது வேன் ஏற்றி கொலை: தம்பி, மகன் கைது

தேனியில் விவசாயி மீது வேன் ஏற்றி கொலை: தம்பி, மகன் கைது
X
தேனியில் விவசாயியை வேன் ஏற்றி கொலை செய்த அவரது தம்பியும், மகனும் கைது செய்யப்பட்டனர்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டி பள்ளி ஓடைத்தெருவை சேர்ந்தவர் ஆசையன், 43. இவரது மனைவி செல்வி, 35. இரண்டு மகன்கள் உள்ளனர். ஆசையனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது மனைவியையும் விவகாரத்து செய்து விட்டார்.

அதன் பின்னரும் மனைவி வசிக்கும் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு துன்புறுத்தி உள்ளார். ஆசையனின் தொல்லை வரம்பு மீறவே அவரது தம்பி சிவனேஷ்வரன், 26 அவரது 16வயது மகனை வேனில் ஏற்றிக் கொண்டு, ஆசையன் சென்ற டூ வீலரில் மோதி கொலை செய்தார். அல்லிநகரம் போலீசார் விசாரணை நடத்தி இருவரையும் கைது செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!