இந்த வாரம் 100% இலக்கை எட்டுவோம் சில்லமரத்துப்பட்டி ஊராட்சி தலைவர் உறுதி
சில்லமரத்துப்பட்டியில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. (இடது ஓரம்: தலைவி வனிதா)
கலெக்டர் அறிவிப்பு படி தேனி மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட முதல் கிராமம் என்ற அந்தஸ்த்தினை சில்லமரத்துப்பட்டி ஊராட்சி பெறும் என தலைவர் வனிதா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போடும் கிராமத்தில் விழா நடத்தி தலைவர்களுக்கு பாராட்டு சான்று வழங்குவேன் என கலெக்டர் முரளீதரன் உறுதி அளித்துள்ளார். எங்கள் சில்லமரத்துப்பட்டி கிராமத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 90 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு விட்டோம். வரும் செப்டம்பர் 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நுாறு சதவீதம் இலக்கினை எட்டி விடுவோம். தடுப்பூசி போடாத 10 சதவீதம் பேரின் முழு விவரங்களை சேகரித்து அவர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி போட ஏற்பாடுகளை செய்து விட்டோம். மாவட்டத்தில் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்ட முதல் கிராமம் என்ற அந்தஸ்த்தினை பெற்று விடுவோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu