மூணாறு செல்லும் பாதையில் மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

போடியில் இருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகனங்கள் மாற்றப்பாதையில் செல்கின்றன

தேனி மாவட்டம் போடியில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறுக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூணாறுக்கு அருகே கேப் ரோடு என்ற இடம் உள்ளது. மிகவும் ரம்மியமான இப்பகுதி சிறந்த சுற்றுலா தளமாகவும் உள்ளது.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால், கேப்ரோடு என்ற இடத்தில் மலையில் மண்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மண் ரோட்டில் சரிந்து குவிந்து போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் போடியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் ராஜகுமாரி, ராஜாக்காடு வழியாக மூணாறுக்கு செல்கின்றன. மலைச்சரிவில் கீழே விழுந்த பாறைகள், மண் அகற்றப்பட்ட பின்னர் வழக்கம் போல் போக்குவரத்து தொடரும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!