தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு
X

பைல் படம்

கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே பதிவாகி வருகிறது என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

தேனி மாவட்டத்தில் இன்று மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

தேனி மாவட்டத்தில் இரண்டாவது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களாக ஒற்றை இலக்கத்திலேயே கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. ஏதாவது ஓரிரு நாள் மட்டும் இரட்டை இலக்கத்தை எட்டும். பின்னர் மீண்டும் ஒற்றை இலக்கத்திற்கு வந்து விடும். அதுவும் கடந்த பத்து நாட்களாக ஐந்துக்கும் குறைவான அளவே பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா இறப்பும் பெருமளவில் தவிர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் பரிசோதனை தொடர்கிறது. டெங்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க டெங்கு தடுப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!