சாக்கடை பாலம் சேதம்: ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு

சாக்கடை பாலம் சேதம்: ஆம்புலன்ஸ் வாகனத்துக்கு இடையூறு
X

போடி அருகே கீழப்பட்டி கிராமத்தில் சாக்கடை பாலம் சேதம் அடைந்துள்ளதால், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியவில்லை என பொதுமக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

போடி அருகே கீழப்பட்டி கிராமத்தில் சாக்கடைப்பாலம் சேதமடைந்துள்ளதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே கீழப்பட்டியில் சாக்கடை பாலம் பெயர்ந்துள்ளதால் ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.

போடி அருகே உள்ள ராசிங்காபுரம் கிராமத்தை ஒட்டி அமைந்துள்ளது கீழப்பட்டி. இங்குள்ள பிரதான தெருவில் சாக்கடை பாலம் சேதமடைந்து பல மாதங்கள் ஆகிவி்ட்டது. இது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் செய்தும் ஊராட்சி நிர்வாகமோ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ கண்டுகொள்வில்லை. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் இந்த பாதையில் செல்ல வழியில்லாமல் போனது. அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகளை அவசரத்திற்கு மருத்துவமனை கொண்டு செல்ல முடியவில்லை. போடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இந்த சாக்கடை பாலத்தை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்துகின்றனர்.

Tags

Next Story