சசிகலாவை, அதிமுக கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை ஓ.பி.எஸ்., பேட்டி

சசிகலாவை, அதிமுக கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லை ஓ.பி.எஸ்., பேட்டி
X

திமுக அரசை கண்டித்து ஓ.பன்னீர் செல்வம் போராட்டம் நடத்திய போது எடுத்தப் படம்.

சசிகலாவை அஇஅதிமுகவில் இணைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அ.தி.மு.க.,வை தனிப்பட்ட குடும்பம் வழிநடத்த முடியாது என அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., தெரிவித்தார்.

போடியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி நீரை தமிழகத்திற்கு பெற்றுத்தந்தது அ.தி.மு.க., தான். வேறு எந்த கட்சியும் இதில் உரிமை கொண்டாட முடியாது.

அ.தி.மு.க., பொதுக்குழு தான் சசிகலாவை நீக்கி உள்ளது. அவரை மறுபடியும் கட்சியில் இணைக்க வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க.,வை யாராலும் கைப்பற்ற முடியாது.

தனிப்பட்ட குடும்பம் அ.தி.மு.க.,வை வழிநடத்த முடியாது. என் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி.,க்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என நாங்கள் எப்போதும் எதிர்பார்த்தது இல்லை.

அமைச்சரவையில் இடம் கொடுப்பதும், கொடுக்காததும் பா.ஜ.,வின் தனிப்பட்ட விருப்பம். அதில் நாங்கள் ஒரு போதும் தலையிட முடியாது.என்றார்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி