அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: கலெக்டரை சாப்பிட அழைத்த துப்புரவு பணியாளர்கள்

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்: கலெக்டரை சாப்பிட அழைத்த துப்புரவு பணியாளர்கள்
X

போடி டி.மீனாட்சிபுரத்தில் துப்புரவு பணியாளர்களுடன் உரையாடும் தேனி கலெக்டர்

தேனி கலெக்டரை தங்கள் வீட்டிற்கு சாப்பிட அழைத்த துப்புரவு பணியாளர்களிடம், இன்னொரு நாள் வருகிறேன் என கலெக்டர் அன்புடன் கூறினார்

இன்று காலையில் 18ம் கால்வாயில் தண்ணீர் திறந்து விட்ட தேனி கலெக்டர் முரளிதரன் மதியம் பி.டி.ஆர்., கால்வாயில் தண்ணீர் திறந்து விட்டார். பின்னர் அங்கிருந்து போடி பகுதிக்கு ஆய்வுக்காக சென்றார்.

போடி அருகே டி.மீனாட்சிபுரத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு பணி செய்த துப்புரவு பணியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு துப்புரவு பணியாளர் 'அய்யா எங்க வீட்ல இன்னக்கி கறி எடுத்து குழம்பு வெச்சிருக்கோம், சாப்பிட வாங்க' என அன்புடன் அழைத்தார். அவரது அழைப்பை ஏற்ற கலெக்டர் முரளிதரன், 'நான் சைவம்மா... கறி, கோழி சாப்பிட மாட்டேன். சுத்தமான வெஜிடேரியன். அதனால காய்கறி குழம்பு வைச்சுட்டு என்னை கூப்பிடுங்க.. கண்டிப்பா வந்து உங்க வீட்ல சாப்பிடுறேன்' என்றார்.

பின்னர் அவர்களிடம் குறைகளை கேட்டு விட்டு, அவர்களுக்கு டீ, காபி, வடை வாங்கி கொடுத்து விட்டு, உங்கள் குறைகளை விரைவில் தீர்த்து வைக்கிறேன் என உறுதியளித்தார்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!