போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்

போடி நகராட்சி இடத்தில் கட்டப்பட்ட வீரகாளியம்மன் கோயில் அகற்றம்
X

போடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று அகற்றப்பட்டது.

தேனி மாவட்டம், போடியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீரகாளியம்மன் கோயில் இன்று அகற்றப்பட்டது.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சிக்குட்பட்ட புதுக்காலனி நாலாவது வார்டில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த வீரகாளியம்மன் கோவில் நீதிமன்ற உத்தரவின்படி இன்று அகற்றப்பட்டது.

நகராட்சி ஆணையர் சகீலா, தாசில்தார் செந்தில் முருகன், போடி டிஎஸ்பி சுரேஷ், இன்ஸ்பெக்டர்கள் சரவணன், வீரலட்சுமி ஆகியோர் கோயிலை அகற்றினர். உள்ளிருக்கும் விக்ரகத்திற்கு எந்த சேதமும் இன்றி கோயில் அகற்றப்பட்டது.

விக்ரகம் மற்றும் கோயிலுக்கு சொந்தமான இதர பொருள்கள் பத்திரமாக தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இக்கோயிலை அகற்றியது போலவே அனைத்து ஆக்கிரமிப்புகளும் நியாயமான முறையில் அகற்றப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!