போடி பரமசிவன் கோயில் அடிவாரத்தில் வாழை மரங்கள் வெட்டிச்சாய்ப்பு

போடி பரமசிவன் கோயில் அடிவாரத்தில்  வாழை மரங்கள் வெட்டிச்சாய்ப்பு
X
போடியில் வெட்டி வீழ்த்தப்பட்ட வாழை மரங்கள்.
போடி பரமசிவன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள தோட்டத்தில் 4500 வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி வீழ்த்தி உள்ளனர்.

தேனி மாவட்டம், போடி சுப்புராஜ்நகரை சேர்ந்தவர் பாலு. இவர், போடி பரமசிவன் கோயில் மலையடிவாரத்தில் குத்ததைக்கு நிலம் பிடித்து வாழை சாகுபடி செய்திருந்தார். இந்த வாழை மரங்கள் தார் போட்டு வெட்டும் பருவத்தில் வளர்ந்திருந்தன.

நேற்று இரவு, இவரது நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை மரங்களில் 4500 மரங்களை யாரோ சிலர் ஒரே நாள் இரவில் வெட்டி சாய்த்து விட்டனர். மீதம் 3500 மரங்களை வெட்டவில்லை. இது குறித்து பாலு போடி தாலுகா போலீசில் புகார் செய்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீதம் உள்ள வாழை மரங்களை வெட்டி விடாமல் இருக்க, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாழை மரங்களை வெட்டி நாசப்படுத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!