சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

X
By - Thenivasi,Reporter |28 July 2021 8:00 PM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி அருகே உள்ள சின்னமனுாரை அடுத்த குச்சனுாரை சேர்ந்தவர் தர்மர், (வயது 41 ). இவர் தனது தெருவில் வசிக்கும் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சின்னமனுார் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராஜ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷன் முன் இன்று நடைபெற்றது.
விசாரணையில், குற்றவாளி தர்மருக்கு பத்து ஆண்டு சிறை தண்டனையும், ஐந்து ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu