தேனி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
X
தொடர் மழை காரணமாக தேனி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் முரளீதரன் அறிவித்துள்ளார்

வடகிழக்குபருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால், தென் தமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்றிலிருந்தே பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் மழை தொடர்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நாளை( நவ.26-வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
ai powered agriculture