போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி

போடியில் பலத்த மழை: கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் அவதி
X

போடியில் பெய்த பலத்த மழையால் வளையபட்டி கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

போடி பகுதியில் நேற்று பெய்த பலத்த மழையால் பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது.

போடி பகுதியில் பெய்த பலத்த மழையில் கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது.

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. கூடலுார், கம்பம், உத்தமபாளையம், போடி பகுதியில் மழையளவு சற்று அதிகமாக உள்ளது. நேற்று போடி பகுதியில் பெய்த பலத்த மழையில் பல கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்தது. குறிப்பாக வளையபட்டி கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!