போடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு

போடி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு
X

உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் போடியில் உள்ள மீன் மார்க்கெட்டில் ஆய்வு நடத்தினர்.

போடியில் கெட்டுப்போன உணவு விற்கப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ராகவன், போடி ஆய்வாளர் சுகன்யா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் சுல்தான் உட்பட அதிகாரிகள் குழு இன்று, போடியில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது, மீன் மார்க்கெட் சென்ற அவர்கள், அங்கு கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா? மீனை பதப்படுத்த வேதிக்கலவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து டீக்கடைகள், ஓட்டல்கள், இறைச்சிக்கடைகளில் ஆய்வு செய்து, தரக்குறைவான பொருட்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!