போடி கொட்டகுடி ஆற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தல்

போடி கொட்டகுடி ஆற்றில் ஆய்வு செய்த விவசாய சங்கத்தினர்.
போடி கொட்டகுடி ஆற்றில் பேதார் அணை பிரிவிலிருந்து கால்வாய் அமைத்து கண்மாய்களுக்கு நீர் கொண்டு வர வேண்டும் என தேனி மாவட்ட விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடி கொட்டகுடி ஆற்றில் விவசாய சங்கத்தினர் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தேனி அருகே உள்ள பூதிப்புரம் கண்மாய், அல்லிநகரம் கண்மாய், அன்னஞ்சி ஓடை கண்மாய், பொம்மைய கவுண்டன் பட்டி கண்மாய்களுக்கு கொட்டகுடி ஆற்றின் பேதார் அணை பிரிவிலிருந்து கால்வாய் அமைத்து தண்ணீர் திருப்பி விட வேண்டும்.
இதனால் இந்த கண்மாய்களில் நீர் வளம் அதிகரிப்பதோடு, கால்வாய் வரும் வழியில் உள்ள நிலங்களில் இருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் பம்பு செட்டு உள்ள கிணறுகளுக்கு நீர் ஆதாரம் கிடைத்து விவசாயம் செழிக்கும்.
தற்போதைய சூழலில் கிணறுகளில் நீர் வரண்டு விட்டது. இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்கும் கீழ் நீர் சென்று விட்டது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
ஆனால், கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது. விவசாயிகள் வறுமையின் பிடியில் சிக்கி தங்களது விவசாய நிலங்களை வீட்டடி மனைகளாக மாற்றும் அவலம் அரங்கேறி வருகிறது.
எனவே கொட்டக்குடி ஆற்றின் பேதார் அணை பிரிவிலிருந்து புதிய கால்வாய் அரசு அமைத்துக் கொடுத்து கண்மாய்களில் நீர் நிரப்பினால், பல ஆயிரம் விவசாய குடும்பங்களை பாதுகாக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu