சூடு பிடிச்சிருக்குனு சொல்வாங்களே, அது இதுவா? 'அயர்ன்' பிரசாரம்

சூடு பிடிச்சிருக்குனு சொல்வாங்களே, அது இதுவா? அயர்ன்  பிரசாரம்
X
போடி நகராட்சி பகுதியில் தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் அயர்ன் செய்து தேர்தல் பிரசாரம் செய்தார்.

போடி நகராட்சியில் வீதி, வீதியாக பிரச்சாரம் செய்து வரும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன், அங்கிருக்கும் பொதுமக்களை கவர்வதற்காக வியாபாரிகளுடன் இனைந்து வெங்காயம் நிறுத்து கொடுப்பது, அயர்ன் தொழிலாளிக்கு உதவியாக துணி தேய்த்து கொடுப்பது என அசத்தி வருகிறார்.

தமிழகத்தில் உள்ள நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படும் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ஐ எதிர்த்து களம் காணும் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

போடிநாயக்கனூர் நகராட்சிக்குபட்ட 25, 26, மற்றும் 27 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட நந்தவனம், மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் இன்று வீதி, வீதியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வெங்காய வியாபாரியுடன் இணைந்து பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கு, வெங்காயத்தை எடை போட்டு கொடுத்தார்.

மேலும் சாலையில் நின்று அயர்ன் செய்து கொண்டிருந்த சலவைத் தொழிலாளியின் அயர்ன் பெட்டியை வாங்கி துணியை அயர்ன் செய்து கொடுத்து அசத்தினார். இதற்கெல்லாம் ஒரு படி மேல் வீடுகளில் இருக்கும் சிறுவர்களிடம் கொஞ்சி பேசிய தங்கதமிழ்செல்வன் தனது புகைப்படம் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை காண்பித்து யார் என கேட்டும் பதில் வாங்கினார்.

Tags

Next Story
ai marketing future