பூமி பூஜை விழாவில் பங்கேற்ற திமுக- அதிமுக நிர்வாகிகள்

பூமி பூஜை விழாவில் பங்கேற்ற திமுக- அதிமுக நிர்வாகிகள்
X

போடியில் இன்று நடைபெற்ற பூமி பூஜையில் திமுக -அதிமுக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்

போடியில் இன்று நடைபெற்ற பூமி பூஜையில் திமுக, அதிமுக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்

போடியில் இன்று நடைபெற்ற பூமி பூஜையில் திமுக அதிமுக நிர்வாகிகள் இணைந்து பங்கேற்றனர்.

போடி நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே மூணாறு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இடத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் இடிக்கப்பட்டு, அங்கு 3.8 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை விழா இன்று காலை நடைபெற்றது. இந்த விழாவில் திமுக நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் திமுகவினரும், போடி அதிமுக எம்எல்ஏ ஒ.பன்னீர்செல்வம் சார்பில் அதிமுக நகர செயலாளர் பழனிராஜ் தலைமையில் அதிமுக வினரும் பங்கேற்றனர். இருதரப்பினரும் இணைந்து பூஜை செய்து, சாமி கும்பிட்டு பணிகளை தொடங்கி வைத்தனர்.

போடியில் எதிரும், புதிருமாக செயல்படும் திமுக - அதிமுக நிர்வாகிகள் இணைந்து முதன் முறையாக ஒரு அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றது மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story