தார் ரோட்டில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம்

தார் ரோட்டில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம்
X

போடி, கீழராஜவீதியில் இருந்து சர்ச் செல்லும் மெயின் ரோட்டில் ஏற்பட்ட பள்ளம்.

போடியில், மக்கள் அதிக நடமாட்டம் உள்ள மெயின் ரோட்டில் திடீர் என பள்ளம் உருவாகி விபத்திற்கு வழிவகுத்துள்ளது.

தேனி மாவட்டம், போடி, கீழராஜவீதியில் இருந்து சர்ச் செல்லும் மெயின் தெரு அமைந்துள்ளது. இந்த தார் ரோட்டில் இன்று திடீரென பள்ளம் ஒன்று உருவாகி உள்ளது. இதனை கவனிக்காமல் ரோட்டில் நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் கால் தடுக்கி விழும் அபாயம் உள்ளது. தற்காலிகமாக, பள்ளத்தை சுற்றி ஒருசில கற்கள் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு தார்ரோடு அமைக்கும் முன்னர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தை சரியாக மூடாமல், தார்ரோடு பெயரளவிற்கு அமைத்துள்ளனர். இதனால் தற்போது மழையில் பள்ளம் உருவாகி உள்ளதாக தெரிகிறது. தரம் குறைந்த பணிகளை செய்த கான்ட்ராக்டர்கள், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கு முன்பாக, பள்ளத்தை மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்