சின்னமனுாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சின்னமனுாரில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
X

சின்னமனுாரில் ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர்

கட்சி நிர்வாகியை கொலை செய்த கும்பலை கைது செய்ய வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் தமிழார்வனை படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சின்னமனுாரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மார்க்கையன்கோட்டை ரவுண்டான அருகில் நடைபெற்று ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் கதிரப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்பெருமாள், மாவட்டக்குழு உறுப்பினர் காசிராஜா, ஒன்றிய துணைச் செயலாளர் குருசாமி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற (AIYF )மாவட்ட துணை செயலாளர் சரவணபுதியவன், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற( AISF )மாவட்ட செயலாளர் ஆனந்த், மாவட்ட துணை செயலாளர் ஹரிஹரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare