கொரோனா ஊசி போட்டால் தான் மதுபாட்டில் கட்டுப்பாடு வேண்டாம் : அரசு அறிவுரை
பைல் படம்
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டால் மட்டுமே மதுபாட்டில் வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு விதிக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்ட நிர்வாகங்கள் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கினை எட்டும் நோக்கில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே மதுபாட்டில் வழங்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்திருந்தன.
இதனால் குடிமகன்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் டாஸ்மாக் கடையினை தவிர்த்து பிளாக் மார்க்கெட்டில் பாட்டில் வாங்கி குடிக்க தொடங்கினர்.
கட்டுப்பாடு விதிக்கப்பட்ட மாவட்டங்களில் அனுமதியி்ன்றி பாட்டில் விற்பனை செய்யப்படுவது அதிகரித்தது. இதனால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும் என கருதிய அரசு இந்த கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்தியது.
கொரோனா தடுப்பூசி எவ்வளவு முக்கியம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். மக்கள் தாங்களாக முன்வந்து போடுபவர்கள் போட்டுக்கொள்ளட்டும் மற்றவர்களை கட்டாயப்படுத்தாமல், விழிப்புணர்வு மூலம் நுாறு சதவீத இலக்கினை எட்டுவோம் என தமிழக அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu