தேனியில் இன்று 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

தேனியில் இன்று 3 பேருக்கு கொரோனா  பாதிப்பு
X
கேரளாவில் புதியதாக உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் தாக்கம் தேனி மாவட்டத்தை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளது

தேனி மாவட்டத்தில் நேற்று 1076 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டன. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இதன் முடிவுகள் இன்று காலை 8 மணிக்கு வெளியானது. இதன்படி 3 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் புதியதாக உருமாறிய கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் தாக்கம் தேனி மாவட்டத்தை பாதிக்கும் வாய்ப்புகள் இருப்பதால் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருவதாகவும், அரசின் வழிகாட்டுதல்களின்படி தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!