தேனி ஜவுளிக்கடையில் இலவசமாக வழங்க வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்

தேனி  ஜவுளிக்கடையில்  இலவசமாக வழங்க வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் பறிமுதல்
X

பைல் படம்

தேனியில் பிரபல ஜவுளிக்கடையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை அதிகாரிகள் கைபற்றினர்

தேனியில் பிரபல ஜவுளிக்கடை ஒன்றில் அதிக பணத்திற்கு ஜவுளி வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப பட்டாசுகள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இதனால் கடையில் பொதுமக்கள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.

தீபாவளி வியாபாரமும் களை கட்டி இருந்தது. இருப்பினும் மிகப்பெரிய ஜவுளிக்கடையில் அனுமதியின்றியும், பாதுகாப்பு இன்றியும் பட்டாசுகளை வைத்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகித்து வருவதாக கலெக்டர் முரளீதரனுக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவின்படி, வருவாய்த்துறை, போலீஸ்துறை, தீயணைப்புத்துறை அதிகாரிகள் அந்த ஜவுளிக்கடையில் ஆய்வு நடத்தினர். அங்கு அனுமதியின்றி அதிகளவில் பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த பட்டாசுகள் அனைத்தும் பாதுகாப்பு இன்றி வைக்கப்பட்டிருந்ததாக கூறி அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.


Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!