கணவருடன் கருத்து மோதல்: கல்லுாரி மாணவி தற்கொலை

கணவருடன் கருத்து மோதல்:  கல்லுாரி மாணவி தற்கொலை
X
கணவருடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மனம் உடைந்த கல்லுாரி மாணவி துாக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி சின்னமனுார் அருகே உள்ள கரிச்சிபட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி சோபிகா. இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகிறது.

சோபிகா மதுரை தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., மைக்ரோபயாலஜி 3ம் ஆண்டு படித்து வந்தார். மனைவி நகையை சதீஷ் வாங்கி அடகு வைத்து விட்டார். இந்த விஷயத்தில் கணவன், மனைவி இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சோபிகா தனது வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

ஓடைப்பட்டி எஸ்.ஐ., கிருஷ்ணக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!