உயிரை பறித்த அதிக வேகம்: சின்னமனூர் அருகே விபத்தில் 2 மாணவர்கள் பலி

உயிரை பறித்த அதிக வேகம்: சின்னமனூர் அருகே   விபத்தில் 2 மாணவர்கள் பலி
X
தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே நடைபெற்ற டூ வீலர் விபத்தில் பாலிடெக்னிக் மாணவர்கள் இருவர் பலியாகினர்.

தேனி மாவட்டம், சின்னமனுார் அருகே உள்ள அழகாபுரியை சேர்ந்தவர்கள் அபிமன்யூ, நாகராஜ். இவர்கள் இருவரும் கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் 3 ஆம் ஆண்டு மெக்கானிக் படித்து வந்தனர். இன்று மாலை, கல்லுாரி முடிந்து டூ வீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வேப்பம்பட்டி- அழகாபுரி ரோட்டில் பெரும்பாலும் வாகன நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இதனால், அந்த ரோட்டில் அதிக வேகமாக டூ வீலரில், இருவரும் சென்றுள்ளனர். அழகாபுரி விலக்கு அருகே, டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து தோட்டத்து வேலிக்கு அமைக்கப்பட்டிருந்த கல் கம்பத்தில் மோதியது; இதில், டூ வீலர் டயர் வெடித்தது.

இந்த விபத்தில், இருவரும் சுமார் 30 அடி துாரம் துாக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த இருவரும், சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா