போடி மீனாட்சிபுரம் கண்மாய் வற்றியதால் செத்து மிதக்கும மீன்கள்: கிராம மக்கள் அவதி

மீன்கள் செத்து மிதப்பதால் கண்மாய் நீர் முழுமையாக மாசுபட்டுள்ளது. இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது

தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாயான மீனாட்சிபுரம் கண்மாய் வறண்டு வருவதால், அதில் வளர்ந்த மீன்கள் செத்து கரையோரம் ஒதுங்குகின்றன. இதனால் ஏற்படும் துர்நாற்றத்தால் மூன்று கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தேனி மாவட்டத்தின் மிப்பெரிய கண்மாய் போடி மீனாட்சிபுரம் கண்மாய் ஆகும். ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் இந்த ஆண்டு வறண்டு வருகிறது. கண்மாயில் மீன்கள் அதிகம் உள்ளன. ஆனால் மீன்பிடிக்கும் உரிமம் யாருக்கும் வழங்கப்படவில்லை. மிகப்பெரிய கண்மாயான மீனாட்சிபுரம் கண்மாய் வறண்டு விட்டதால், அதில் வளர்ந்த மீன்கள் செத்து நீரில் மிதந்தும் கரையோரத்திலும் கிடக்கின்றன. கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கக்கூடிய கண்மாய் நீர் முழுமையாக மாசடைந்துள்ளது. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கண்மாயினை சுற்றி உள்ள மீனாட்சிபுரம், விசுவாசபுரம், அம்மாபட்டி கிராம மக்கள் துர்நாற்றத்தை தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். தவிர இப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் சுகாதாரத்துறையினர் கவலை தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture