அப்துல் கலாம் பிறந்த நாள்: போடி மீன் மார்க்கெட்டில் மரக்கன்று நடும்பணி

அப்துல் கலாம் பிறந்த நாள்: போடி மீன் மார்க்கெட்டில்  மரக்கன்று  நடும்பணி
X

போடி மீன் மார்க்கெட்டில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மூன்று நாட்களாக போடியில் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு போடி கிரீன் லைப் பவுன்டேசன் சார்பாக கடந்த மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இன்று போடி மீன்மார்க்கெட், அம்மா உணவக வளாகத்தில் சரக்கொன்றை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த மரம் காற்றுமாசுவினை கட்டுப்படுத்தி, சுத்தமான காற்றை வெளியிடும் தன்மை கொண்டது என கிரீன்லைப் பவுண்டேசன் தலைவர் நம்பிக்கை நாகராஜ் தெரிவித்தார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்