பிலிப்பைன்ஸ் நாட்டில் நீர்வீழ்ச்சியில் குளித்த போடி மாணவன் மூழ்கி உயிரிழப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் நீர்வீழ்ச்சியில் குளித்த போடி மாணவன் மூழ்கி உயிரிழப்பு
X

பிலிப்பைன்சில் இறநத போடி மாணவன் ஷஷ்டிகுமார்.

பிலிப்பைன்ஸ்சில் மருத்துவம் படித்து வந்த போடி மாணவன், நீர்வீழ்ச்சியில் குளிக்கும் போது சுழலில் சிக்கி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம், போடி ராசிங்காபுரத்தை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் பாலசேகரன் மகன் ஷஷ்டிகுமார், 22. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகரில் மகாட்டி சிட்டியில் தனியார் மருத்துவக் கல்லுாரியில் 4ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை கேவண்டி லகுனா என்ற சுற்றுலா தள நீர் வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். அப்போது நீர் சூழலில் சிக்கி உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த போடியில் உள்ள இவரது பெற்றோர் தனது மகன் உடலை மீட்டுத்தருமாறு இந்திய வெளியுறவுத்துறையில் முறையிட்டனர். அவரது உடலை போடி ராசிங்காபுரத்திற்கு கொண்டு வர வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!