போடியில் ரோடு எப்ப போடுவாங்க...? 'குறி' கேட்ட கவுன்சிலர்

X
போடி ஏழாவது வார்டில் எப்ப ரோடு போடுவாங்க என தி.மு.க., கவுன்சிலர் குடுகுடுப்பைக்காரரிடம் குறி கேட்டார்.
By - Thenivasi,Reporter |8 April 2022 7:45 AM IST
போடி 7வது வார்டு பகுதியில் ரோடு எப்ப போடுவாங்க என, குடுகுடுப்பைக்காரரிடம் கவுன்சிலர் குறி கேட்ட நகைச்சுவை வீடியோ வைரலாகி வருகிறது.
முன்னாள் துணை முதல்வரும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்ல்செல்வம் தொகுதியான போடியில் ரோடுகள் போட கான்ட்ராக்டர் விட்டு பல ஆண்டுகள் ஆகி வி்ட்டது. தோண்டிப்போட்ட ரோடுகளை கூட சீரைமக்கவில்லை. புதிய கவுன்சிலர்கள் பொறுப்பேற்றும் இந்த பணிகள் கிடப்பில் கிடந்தன.
இந்நிலையில் தி.மு.க. வார்டு கவுன்சிலர் ராஜசேகர் தனது வார்டில் எப்ப ரோடு போடுவாங்க... என குடுகுடுப்பைக்காரர் ஒருவரிடம் குறி கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த ரோட்டை சீரமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu