போடி- மதுரை- சென்னை ரயில் தாமதம்: ஏமாற்றத்தில் தேனி மாவட்ட மக்கள்

போடி- மதுரை- சென்னை ரயில் தாமதம்: ஏமாற்றத்தில் தேனி மாவட்ட மக்கள்
X

பைல் படம்.

Madurai To Bodi Train Latest News-தேனி மாவட்ட பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போடி- மதுரை- சென்னை ரயில் தாமதம் ஆவதால் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Madurai To Bodi Train Latest News-தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை, பெங்களூரு செல்வது இன்னும் சிரமம் நிறைந்த பயணமாகவே உள்ளது. சென்னை, பெங்களூரு நகரங்களுடன் நான்கு வழிச்சாலை இணைப்பில் தேனி இருந்தாலும், ஆம்னி பஸ் கட்டணங்கள் மக்களை மலைக்க வைக்கிறது. அரசு போக்குவரத்து கழக பஸ்களின் கட்டணத்தை விட ஆம்னி பஸ்களின் கட்டணம் சாதாரண நேரங்களில் மூன்று மடங்கும், சீசன் நேரங்களில் ஐந்து மடங்கும் அதிகமாக உள்ளது.

இதனால் மக்கள் சென்னை- போடி ரயிலை பெருமளவில் எதிர்பார்த்தனர். தவிர தேனி மாவட்ட வர்த்தகர்களும் சென்னை- போடி ரயிலை ஆர்வமுடன் எதிர்பார்த்தனர். ரயில்வே நிர்வாகமும் பிப்ரவரி மாதம் போடியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து போடிக்கும் ரயில் இயக்கப்படும் என அறிவித்தது. பின்னர் பிரதமர் தமிழக வருகையின் போது தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

இந்நிலையில் நாளை பிரதமர் திறந்து வைக்கும் நிகழ்ச்சிகளின் பட்டியலில் சென்னை- போடி ரயில் திட்டம் இல்லை. இதனால் இந்த திட்டம் மீண்டும் தாமதம் ஆகும் எனத் தெரிகிறது.

இது குறித்து ரயில்வே வட்டாரத்தில், போடியில் ரயில்வே ஸ்டேஷன் பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. குறிப்பாக சென்னை ரயில் போடியில் நிற்கும் போது, சுத்தம் செய்வது, நீரேற்றுவது போன்ற அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். சில நேரங்களில் பழுது நீக்கும் பணிகள் செய்ய வேண்டும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக நிறைவடையாததால், இந்த பணிகளை முடித்த பின்னர் ரயில் போக்குவரத்தை தொடங்கலாம் என ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!