போடி- சென்னை ரயிலுக்கு பிப்., 18ல் முன்பதிவு தொடக்கம்..

Theni to Chennai Train Timings
X

Theni to Chennai Train Timings

Theni to Chennai Train Timings-போடியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயிலுக்கு பிப்., 18ம் தேதி முன்பதிவு தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Theni to Chennai Train Timings-மதுரை- போடி அகல ரயில்பாதை பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், சென்ட்ரலில் இருந்து மதுரை வரை இயக்கப்படும் ரயில் சேவை போடி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பிப்.,19ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிக்கு ரயில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

போடியில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் சென்னை ரயில், தேனிக்கு 8.50க்கு வந்து சேரும். ஆண்டிபட்டிக்கு 9.30 மணிக்கு சென்றடையும். மதுரைக்கு இரவு 10.50 மணிக்கு சென்று சேரும். திண்டுக்கல்லுக்கு 12.55 மணிக்கு சென்றடையும். சேலத்திற்கு 2.20க்கும், காட்பாடிக்கு 3.15க்கும், சென்னை பெரம்பூருக்கு காலை 7.05க்கும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு 7.55க்கும் சென்று சேரும். போடியில் இருந்து புறப்படும் ரயில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் மட்டும் புறப்படும்.

சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள், புதன், வெள்ளி மட்டும் இந்த ரயில் புறப்படும். சென்னை சென்ட்ரலில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு அதிகாலை 3 மணிக்கு வந்து சேரும். காலை 4.40க்கு கரூர், காலை 6 மணிக்கு திண்டுக்கல்லுக்கும், காலை 7.15 மணிக்கு மதுரைக்கும் வந்து சேரும். மதுரையில் இருந்து கிளம்பி காலை 8 மணிக்கு உசிலம்பட்டி, 8.20க்கு ஆண்டிபட்டி, 8.40க்கு தேனி வந்து சேரும். காலை 9.05 மணிக்கு போடி வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் புறப்படும் ரயில் சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக போடி வந்து சேரும். சென்னையில் இருந்து போடிக்கு திங்கள், புதன், வெள்ளிக்கிழமையும், போடியில் இருந்து சென்னைக்கு ஞாயிறு, செவ்வாய், வியாழன் கிழமைகளிலும் புறப்படும். இந்த ரயிலில் ஒரே நேரத்தில் 2000ம் பேர் வரை பயணிக்க முடியும். இந்த ரயிலுக்கான முன்பதிவு பிப்ரவரி 18ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story