தேனியில் ரத்த நன்கொடையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்களுக்கு கலெக்டர் விருது
அதிகளவு ரத்ததானம் வழங்கிய த.மு.மு.க.,வினருக்கு கலெக்டர் முரளீதரன் பாராட்டு சான்றுகளை வழங்கினார்.
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் கலெக்டர் முரளீதரன் 400 நன்கொடையாளர்கள், 38 ஒருங்கிணைப்பாளர்களுக்கு விருது வழங்கினார்.
இந்த விழாவில் மருத்துவக் கல்லுாரி முதல்வர் பாலாஜிநாதன், ஒருங்கிணைப்பாளர் இளங்கோ உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். ஒருவர் வழங்கும் ரத்ததானம் 4 பேரின் உயிரை காப்பாற்றும். ரத்ததானம் செய்வதால் தானம் கொடுப்பவரின் உடல்நலம், மனநலம் பாதுகாக்கப்படும்.
தேனி மாவட்டத்தில் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, பெரியகுளம் அரசு மருத்துவமனை, கம்பம் அரசு மருத்துவமனையில் ரத்தவங்கி உள்ளது என கலெக்டர் முரளீதரன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu