தேனி நாடாளுமன்ற தொகுதியை புறக்கணிக்கும் பா.ஜ.க., வி.வி.ஐ.பி.க்கள்
தேனி நாடாளுமன்ற தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் டிடிவி தினகரன்.
தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் தங்க.தமிழ்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஏராளமான நட்சத்திர பேச்சாளர்கள் வந்து சென்று விட்டனர். முதல்வர் ஸ்டாலினே தேனியில் ஒரு நாள் முழுக்க தங்கி கட்சி நி்ர்வாகிகளை சந்தித்ததோடு, பெரிய அளவில் பிரச்சாரக்கூட்டத்திலும் பங்கேற்று சென்று விட்டார்.
அதேபோல் அ.தி.மு.க.,விற்கும் நட்சத்திர பேச்சாளர்கள் வந்து சென்று விட்டனர். அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தேனிக்கு வந்து பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசி சென்று விட்டார். இந்நிலையில் பா.ஜ.க.,கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி., தினகரனுக்கு தான் பிரச்சாரம் செய்ய யாரும் வரவில்லை. டி.டி.வி., தினகரனும், அவரது மனைவி அனுராதா மட்டுமே தொகுதி முழுக்க பிரச்சார கூட்டத்திற்கு சென்று வருகின்றனர்.
கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேனிக்கு வருவதாக இருந்தது. தேனியில் ரோடு ஷோ நடத்த ஏற்பாடுகள் முழுமையாக தயாராகி விட்ட நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது. இப்போது மீண்டும் அமித்ஷா வர இருக்கிறார். இந்த பயண திட்டத்தில் தேனி தொகுதி இடம் பெறவில்லை. அதேபோல் பிரதமர் நிகழ்ச்சியிலும், இதர மத்திய அமைச்சர்கள் நிகழ்ச்சியிலும் தேனி இடம் பெறவில்லை. பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கூட தேனி தொகுதியில் எட்டிப்பார்க்கவில்லை.
என்ன தான் டி.டி.வி., செல்வாக்கான தலைவராக இருந்தாலும், அவருக்கு உதவிக்கு பா.ஜ.க.,வின் வி.வி.ஐ.பி.,க்கள் வராதது ஏமாற்றமாகத்தான் உள்ளது என தேனி மாவட்ட பா.ஜ.க.,வினரும், அ.ம.மு.க.,வினரும் கூறி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu