இலவசங்களுக்கு தடைவிதிக்க சுப்ரீம் கோர்ட்டை நாடும் பா.ஜ.க.

பி.ஜே.பி. ஒரு முக்கியமான விஷயத்தை சுப்ரீம் கோர்ட்டுக்கு கொண்டு சென்றிருக்கிறது. நாம் எதற்காக கஷ்டப்பட்டு படிக்கிறோம்? எதற்காக வேலை செய்கிறோம்? எதற்காக நாம் ஈட்டும் சம்பளத்தில் ஒரு கணிசமான பங்கை டைரக்ட் டாக்ஸாகவும் இண்டைரக்ட் டாக்ஸாகவும் கட்டுகிறோம். நமக்குத் தேவையான சிவில் வசதிகளை (உதாரணம்: ரோடு, தண்ணீர், ட்ரெய்னேஜ்) போன்றவற்றை அரசாங்கம் ஒழுங்காக செய்ய வேண்டும் என்பதற்காக..! என் பணத்தை நான் அரசாங்கத்துக்கு கொடுக்கும் போது அதற்கான ரிட்டர்னை எதிர்பார்ப்பது என் உரிமை தானே..? சரி.
நம்ம நாடு கேபிடலிஸ்ட் நாடு அல்ல, அதனால் மக்கள் வெல்ஃபேர் ஸ்கீம்ஸ் எனப்படும், வறியவர்களுக்கான உதவிகள் - இலவச படிப்பு, இலவச மருத்துவம் போன்றவைக்காக - நாட்டின் வருமானத்தில் ஒரு பங்கு பணம் செலவிடப்பட வேண்டும் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இப்போது இந்தியாவில் என்ன நடக்கிறது..? நடப்பவை, ஏழைகளுக்கான அத்தியாவசிய வெல்ஃபேர் செலவுகள் அல்ல..! தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக , விவஸ்தையே இல்லாமல் கண்டமேனிக்கு இலவசங்கள் கொடுக்கிறோம் என்று அறிவித்து ஆட்சிக்கு வருவது நடைமுறையாகி விட்டது. இப்போது இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும், எல்லா கட்சிகளும் அதையே செய்கின்றன..! 'எந்த இலவசங்களை அறிவித்தாவது ஆட்சிக்கு வந்து விட வேண்டும்; வந்த பிறகு, நமக்கு 'ஒதுக்கிக் கொள்வது' போக, என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வோம்; நாடு எக்கேடோ கெட்டுப் போகட்டும்..' என்ற விட்டேத்தியான அரசாங்கம் தான் இப்போது இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் நடக்கிறது..!
இப்போது, ஒரு மாநிலத்தின் மொத்த வருமானத்தில், 50% வட்டி, சம்பளம் போன்ற தவிர்க்கமுடியாத செலவுகள்; 40% இலவசங்கள்; 10% ஆளும் கட்சி தனக்கு ஒதுக்கிக் கொள்ளும்..! இவ்ளோதான் அரசாங்கம் என்பது..! இதற்கு மோடி, ஸ்டாலின் எல்லாம் எதற்கு..? பிறந்த குழந்தை கூட அரசு நடத்தி விடலாமே..? யோசியுங்கள் : சீனா நம்மைப் போலவே அதிக ஜனத்தொகை கொண்ட நாடு. ஆனால் அவர்கள் மக்களை இன்னும் அதிகம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! அதிக மனிதர்கள் என்றால் அதிக உழைப்பு, நாட்டிற்கு அதிக வருமானம் என்று தானே இருக்க வேண்டும்..? ஏன் நம் நாட்டில் இல்லை..? காரணம், இங்கே ஜனத்தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் காலை ஆட்டிக் கொண்டு சும்மா கிடக்கிறார்கள்..! அவர்களுக்கு ஓட்டு இருப்பதால் இலவசங்கள் இருக்கின்றன..! நாம் சீனாவுக்கு நிகராக வளர்வது கனவிலும் சாத்தியமா..?
இலவசங்கள் பெருகப் பெருக நம் தேசத்தின் வளர்ச்சி குறைந்து கொண்டே வரும் என்பதைப் புரிந்து கொள்வத,ற்கு, நமக்கு பெரிய பொருளாதார மூளையெல்லாம் தேவையில்லை, கொஞ்சம் யோசித்தாலே போதும்..! கண்மூடித்தனமான இலவசங்கள் மட்டும் இல்லையென்றால், வளர்ச்சியில் நாம் உலகின் முதல் நாடாக வந்து விட முடியும்..! இலவசங்கள் கொடுத்து கொடுத்தே, இந்தியாவின் வளர்ச்சியை நாம் கீழே இழுத்துக் கொண்டிருக்கிறோம்..! இதைத்தான் நம் பிரதமர் மோடி திரும்ப, திரும்ப சொல்கிறார். அவசிய தேவைகள் தவிர மற்ற எதற்கும் இலவசம் தராதீர்கள். இதனை சட்டமாக்க வேண்டும் என்று. இப்போது இந்த விஷயம் சுப்ரீம்கோட்டிற்கு பா.ஜ.,மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாடு வளர வேண்டுமானால், மிகத் தேவையான வெல்ஃபேர் செலவுகள் தவிர, மற்ற கண்மூடித்தனமான, ஓட்டு வேட்டைக்காகத் தரப்படும் இலவசங்கள் கட்டுப்படுத்தப்பட்டே ஆக வேண்டும்..! இது யோசிக்கத் தெரிந்தவர்கள் எல்லோரின் மனசாட்சியும் சொல்லும் உண்மை..! ஆனால் இங்கே பலர் உண்மை பேசுவதில்லை..! மெத்தப்படித்தவர்கள் பெரும்பாலோனோர் இருக்கும் டெல்லியிலேயே, இலவசங்கள் கொடுக்கிறது என்பதால் கேஜ்ரிவாலுக்கு ஆதரவு என்றால், இந்த நாடு எப்படி உருப்படும்..?
உழைக்காத சோம்பேறி மக்களின் எண்ணிக்கை பெருகும் நாடு நிச்சயம் திவாலாகும்..! இலங்கை போல, தினப்படி சோத்துக்கே கடன் வாங்க வேண்டிய நில ஏற்படும்..! நாம் எவ்வளவு சம்பாதித்து எவ்வளவு வரிகள் கட்டினாலும், நமக்கு போய் வர ஒரு நல்ல ரோடு கூட இருக்காது.! குடிதன்ணீருக்கே நாம் எக்கச்சக்கமாய் செலவழிக்க வேண்டிய நிலை வரும்..! இது ஒரு சுழல் பிரச்சனை..! ஒரு கட்சி இலவசங்கள் கொடுக்கிறேன் என்று சொன்னால், வேறு வழியின்றி எல்லா கட்சிகளும் அதைச் செய்தே ஆக வேண்டிய கட்டாயமாகிறது..! அதனால், எந்த அரசியல் கட்சியுமே கண்மூடித்தனமாக இலவசம் கொடுக்க முடியாது என்ற நிலை உருவாக்கப் பட்டால் மட்டுமே, இந்தப் பிரச்சனைக்கு தீர்வு வரும்..! இல்லையென்றால் தீர்வே வராது..! அதனால்தான்...தேசத்தின் எதிர்காலம் கருதி பி.ஜே.பி. அரசு இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறது..! தேர்தலில் எந்தக் கட்சியும் இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டு வர, சுப்ரீம் கோர்ட்டின் கான்ஸ்ட்டியூஷன்ல் பெஞ்சை நாடியிருக்கிறது..! இலவசங்களுக்கு பழகி விட்ட இந்தியர்களிடையே இது வரவேற்பு பெறாது என்று தெரிந்தும், முக்கியமான விஷயத்தை தைரியமாக கையில் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
இலவசங்கள் என்பது இனி தனிப்பட்டவருக்கு பணமாகவோ, பொருளாகவோ கொடுப்பதை தடை செய்ய வேண்டும்..! இலவசம் என்பது ஏழை மக்களுக்கு மட்டுமான பொதுவான, வரையறுக்கப்பட்ட வெல்ஃபேர் ஸ்கீம்ஸ்களில் மட்டுமே இருக்க வேண்டும். எந்தக் கட்சியும் தேர்தலின் போது 'நாங்கள் இந்த இலவசம் தருகிறோம், அந்த இலவசம் தருகிறோம்..!' என்று அறிவிக்கக் கூடாது. நீங்கள் கொஞ்சமாவது உங்கள் மனசாட்சியைக் கேளுங்கள்.! இந்த விஷயம் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பதால் தீர்ப்பு வரும் வரை காத்திருப்போம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu