தேனி 15வது வார்டில் பா.ஜ.க தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

தேனி 15வது வார்டில் பா.ஜ.க தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு
X

தேனி சிவராம் நகரில் தாமரைக்கு ஓட்டு கேட்டு செல்லும் பா.ஜ., தொண்டர்கள்.

தேனி நகராட்சி 15வது வார்டில் பா.ஜ., தொண்டர்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் தாங்களாக முன்வந்து ஓட்டு சேகரிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

தேனி நகராட்சி 15வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளர் புவனேஸ்வரி, தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்த வார்டு மிகவும் பெரியது. 2900 ஓட்டுகள் உள்ளன. வார்டு பல துண்டுகளாக சிதறிக் கிடக்கிறது.இதனால் இப்பகுதியில் உள்ள பா.ஜ.க. தொண்டர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, தாங்கள் நேரடியாக ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒவ்வொரு குடியிருப்பிலும் வசிப்பவர்கள், தாங்கள் வசிக்கும் குடியிருப்பில் ஓட்டு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்குறுதிகளை அளித்து, வீடுதேடி வந்து பிரசாரம் செய்யும் பாஜகவினரை வாக்காளர்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!