மக்களை மிரட்டிய பைக் ரேஸ்: 'செக்' வைத்த தேனி போலீசார்
பைல் படம்.
தேனியில் கிட்டத்தட்ட அத்தனை தெருக்களும் போலீசாரின் சி.சி.டி.வி., கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி நகர் பகுதிகளில் பொறுத்தப்பட்டுள்ள கேமராக்கள் மிகவும் அதிநவீனமானவை. இரவிலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யும். மின்தடை ஏற்பட்டாலும் பல மணி நேரத்திற்கும் மேல் இடைவிடாமல் காட்சிகளை பதிவு செய்யும்.
இந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை 24 மணி நேரமும் கண்காணிக்க தேனி மற்றும் அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை இந்த பதிவுகளை பார்த்த போலீசார் கூறுகையில், தேனியில் மொபைல் போன் பேசிக் கொண்டே டூ வீலர் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. மிகவும் நெருக்கடி நிறைந்த ரோடுகளில் கூட இவர்கள் மொபைல் போன் பேசிக்கொண்டே டூ வீலர் ஓட்டுகின்றனர்.
பைக் ரேஸ் செல்பவர்கள் பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்பட்டு விட்டன. இனிமேல் அவர்கள் எந்த தெருவில், எந்த நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபட்டாலும் உடனே கைது செய்ய மாவட்ட போலீஸ்நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட வேகத்திற்கு மேல் டூ வீலரில் வேகமாக சென்றாலும் அவர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் தேனி நகரை பொறுத்தவரை ஆண்களை விட பெண்களே அதிக வேகத்துடன் டூ வீலர்களை ஓட்டிச் செல்கின்றனர். ஆனால் இவர்கள் டூ வீலர் ஓட்டும் போது மொபைல் போன் பேசுவதில்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனாலும் இந்த வேகம் ஆபத்தானது என தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu