தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறைக்கு சிறந்த கல்வி சேவைக்கான விருது..!

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்  உறவின் முறைக்கு சிறந்த  கல்வி சேவைக்கான விருது..!
X

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு வழங்கப்பட்ட சிறந்த கல்விச் சேவைக்கான விருதினை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி பெற்றுக் கொண்டார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு சிறந்த கல்விச்சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின் முறை கடந்த 1919ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த உறவின்முறை தொடங்கப்பட்டு 105 ஆண்டுகள் ஆகி விட்டது. உறவின்முறை சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.சி., பள்ளிகள், பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி, நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி என மொத்தம் 12 கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் இந்த கல்வி நிறுவனங்களில் 30 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

இந்த ஆண்டு வெளியான தமிழக பொறியியல் கல்லுாரிகளின் தரவரிசை பட்டியலில் தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரி மாநில அளவில் 27வது சிறந்த கல்லுாரியாக இடம் பிடித்துள்ளது. 4 ஆயிரம் மாணவிகள் படிக்கும் நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி சிறந்த கல்லுாரிக்கான நாக் தரச்சான்று பெற்றுள்ளது. இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் அரசு பொதுத்தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறந்த இடங்களை பிடித்துள்ளனர்.

கல்வி நிறுவனங்களில் மட்டும் மொத்தம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்த உறவின்முறைக்கு 2013ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ராஜ்மோகன் அண்ணாச்சி பொதுச்செயலாளராக இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் சிறந்த கல்விச் சேவைக்கான விருதினை தமிழக அரசு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைக்கு வழங்கியது. கவர்னர் ரவி இந்த விருதினை உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சியிடம் வழங்கினார். இந்த தகவல் அறிந்த தமிழக மக்கள் தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறையினை வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!