நீர்நிலைகளில் கவனமாக இருங்க..! இந்து எழுச்சி முன்னணி அறிவுறுத்தல்
தேனி அல்லிநகரத்தில் இந்து எழுச்சி முன்னணியின் வார வழிபாட்டு கூட்டம் நடந்தது.
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி அலுவலகத்தில் வார வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர், தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி வழிநடத்தினார். தீர்மானம்: (1) தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சின்னமனூரில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம்: (2) தற்போது மழைக்காலம் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை நீர்நிலை பக்கம் செல்ல விடாமலும் தெருக்களில் நடந்து செல்லும் போது மின் வயர் ஏதும் அறுந்து கிடக்கிறதா என கவனமுடன் பார்த்து செல்ல வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் மழைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு பொதுமக்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இந்து எழுச்சி முன்னணி கேட்டுக் கொள்கிறது.
கடந்த விநாயகர் சதுர்த்தி விழா தேனி மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதேபோல் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை, விஜயதசமி திருவிழாக்களும் மிகவும் சிறப்பாகவும், அமைதியாகவும் கொண்டாடப்பட்டது. அதேபோன்று வரும் தீபாவளி பண்டிகையையும் பொதுமக்கள் மிகவும் அமைதியாகவும், சிறப்பாகவும் கொண்டா வேண்டும். இதுவரை நடந்த விழாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியதை போல் தீபாவளி பண்டிகையையும் சிறப்பாக மக்கள் கொண்டாட மாவட்ட நிர்வாகமும், போலீஸ் நிர்வாகமும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu