பங்களாதேஷூம் தடுமாறுவதற்கு பண மதிப்பிழப்புதான் காரணமா?
பைல் படம்
இலங்கையை அடுத்து... பங்களாதேஷின் பொருளாதாரமும் வேகமாக சரிந்து வருகிறது. 74,000 டன் சர்க்கரை (மதிப்பு 350 கோடி), 17,000 டன் பாமாயில் (மதிப்பு 100 கோடி). இரண்டின் மொத்த மதிப்பே 450 கோடி தான். இந்த பணம் அமெரிக்க டாலரா பங்களாதேஷிடம் இல்லாததாலே நாலு கப்பல் பங்களாதேஷ் எல்லையில் வங்கக் கடலில் நின்று கொண்டுள்ளது.
பங்களாதேஷில் உணவுப்பொருட்கள் இறக்குமதியினை பாதியாகக் குறைத்துள்ளனர். இதனால் இன்னும் ஒரு மாதத்திலே அங்கேயும் பாகிஸ்தான் போல கோதுமைக்கும் எண்ணைய்க்கும் கிலோமீட்டர் கணக்கிலே வரிசை நிக்கும். பணமதிப் பிழப்பால் இந்தியா நாடு திவால் ஆகும் என்ற கணிப்பு பொய்யாகி, சுற்றிலும் உள்ள பலநாடுகள் திவால் ஆகி வருகின்றன.
பக்கத்து நாடு எல்லாம் வரிசையா திவால் ஆயிட்டே இருக்கு. அடுத்து அந்தப்பக்கம் மலேசியா, இந்தோனேசியா, இந்தப்பக்கம் ஈரான் துண்டு போட்டு வரிசையில் நிற்கின்றன. பாகிஸ்தான் உட்பட பாரதத்தின் அண்டை நாடுகள் திவால் ஆவதற்கு முக்கிய காரணமே மோடிஜி யின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கைதான்.
இந்திய தேசத்தின் பணத்தைப் போலவே அங்கே கள்ள நோட்டு அச்சடித்து கொளுத்து வாழ்ந்த பாகிஸ்தானும் அதனிடம் அந்த கள்ளப் பணத்தை வாங்கி குதூகலமாக வாழ்ந்த இன்னும் சில நாடுகளும் இப்போது பணமதிப்பிழப்பு நடவடிக்கை யின் காரணமாக பஞ்சத்தில் சிக்கி வருகின்றன. எப்படியும் உச்ச நீதிமன்றமாவது பழைய நோட்டை சரின்னு சொல்லிடும். அதை வைச்சு பழைய நோட்டை வைச்சே தப்பித்து விடலாம் என நினைத்தவர்கள் எல்லாம் நொறுங்கிப்போய் கிடக்கின்றனர்.
மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, வரிச்சீர்திருத்தம், மேக் இன் இந்தியா திட்டம், சீனாவின் பொருட்களை புறக்கணித்தல், பாதுகாப்பு தளவாடங்கள் உள்நாட்டு உற்பத்தி, உணவு பொருட்கள் ஏற்றுமதி அதிகரிப்பு, கொரோனா தடுப்பு மருந்து தயாரித்து வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது, இந்தியாவில் 130 கோடி மக்களுக்கும் வெளிநாட்டை கையேந்தாமல் பயன்படுத்தியது என அந்நிய செலவாணியை 8 வருடத்திலே பல மடங்கா சேமிச்சு வைச்சார்.. உள்நாட்டிலும் பஞ்சம் பட்டினியில்லாமல் ரேஷன் கடையில் இலவச உணவு தானியம் இரண்டு ஆண்டுகளாக கொடுத்து பார்த்துக் கொண்டார்.. அதனால் இந்தியா இப்போது நல்லாயிருக்கிறது. பசி பஞ்சம் ஏதும் இல்லாமல் மகர சங்கராந்தி பொங்கல் திருவிழாவை ஜல்லிக்கட்டு நடத்தி குதூகலமாக கோலமிட்டு பசி என்றால் என்னவென்றே அறியாமல் கொண்டாடி வருகிறோம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu