புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: பள்ளிகளின் விடுமுறை நீட்டிக்க வாய்ப்பு
தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலை தடுக்க புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன. பள்ளிகளுக்கான விடுமுறை நீடிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். மத்திய குழுவினரும் சென்னையில் முகாமிட்டு பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் டிசம்பர் 31ம் தேதி மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகளுடனும், அரசு அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனை நடத்தப்பட்ட அன்றே தமிழகத்தில் சில தடை உத்தரவுகள் வெளியாகும் என தெரிகிறது.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்தல், பள்ளிகளுக்கான (கல்லுாரிகளுக்கும் சேர்த்து) அரையாண்டு விடுப்பினை நீடித்தல், சுற்றுலா தலங்களுக்கும், தியேட்டர்கள், ஏசி வசதி கொண்ட வணிக வளாகங்களுக்கு தடை விதித்தல், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு தடை விதித்தல், இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம். ஒமிக்ரான் பரவலின் தீவிரத்தை பொறுத்து இந்த கட்டுப்பாடுகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu