அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஹோட்டலில் தங்கியிருக்கும் பாலாஜி

அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஹோட்டலில் தங்கியிருக்கும் பாலாஜி
X
மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் செந்தில்பாலாஜி ஹோட்டலில் தங்கியுள்ளார்.

சிறையில் இருந்து வெளியில் வந்த செந்தில் பாலாஜிக்கு மந்தைவெளியில் சொந்த வீடு இருந்தும் அங்கு போகாமல் மாரிஸ் ஹோட்டலில் தங்கி விட்டார்.

இதற்கு பின்னால் சுவாரஸ்யமான கதை உள்ளது. அவர் அதிமுக கட்சியில் இருந்த காலத்தில் மாரிஸ் ஹோட்டலில் தங்கியிருந்த போதுதான் ஜெயலலிதாவால் சட்டமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். மேலும், இங்கு தங்கியிருந்த போது தான் அமைச்சர் பதவியும் கிடைத்தது. இதனால் இந்த ஹோட்டலை செண்டிமெண்டாக பார்க்கிறார்.

தற்போது, சிறையில் இருந்து வந்ததும் அமைச்சர் பதவி அவருக்கு கொடுக்கப்படும் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கேற்ப அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்த காரணத்தால் இந்த ஹோட்டலில் தங்கினால் நல்ல செய்தி கிட்டும் என்ற அடிப்படையில் தங்கியுள்ளாராம். அமைச்சராக பதவியேற்ற பின்னரே தனது வீட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளார். தனது தொகுதிக்கும், தன் கரூர் மண்டலத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார் என அவரது விசுவாசிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!