தேனி அருகே மனைவி மீதான கோபத்தில் பச்சிளம் குழந்தையை கொலை செய்த தந்தை கைது

தேனி அருகே மனைவி மீதான கோபத்தில் பச்சிளம் குழந்தையை  கொலை செய்த தந்தை கைது
X
தேனி அருகே மனைவி மீது உள்ள கோபத்தில் பிறந்து 30 நாள் ஆன பச்சிளம் குழந்தையை கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 23.). இவர் தனது அத்தை மகள் நவீனாவை காதலித்து திருமணம் செய்தார். நவீனா கர்ப்பமான நிலையில், நாகராஜ் தன் காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தார். இதனால் நவீனா ராயப்பன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 30 நாட்கள் ஆன நிலையில் குழந்தையை பார்க்க சென்ற நாகராஜூக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நாகராஜ் கல்லை எடுத்து தன் மனைவி மீது வீசினார். அந்த கல் மனைவியின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த 30 நாள் ஆன பச்சிளம் குழந்தையை தாக்கியது. இதில் துடித்த குழந்தை உயிரிழந்தது. ராயப்பன்பட்டி போலீசார் நாகராஜை கைது செய்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!