மலைவாழ் மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு

மலைவாழ் மக்களிடம் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு
X

ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு கரட்டுப்பட்டியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தேனி மாவட்ட போலீஸ் நிர்வாகமும், நைல் டிரஸ்ட்டும் இணைந்து, மலைவாழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நலத்திட்ட உ தவிகளை வழங்கின.

தேனி மாவட்டம் வருஷநாடு அருகே உள்ள கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி கிராமத்தில் மலைவாழ் மக்களிடம் மாவட்ட போலீஸ் நிர்வாகமும், நைல் டிரஸ்ட் நிர்வாகமும் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. இதில் குழந்தை திருமணம் கூடாது என்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், தேனி கூடுதல் எஸ்.பி., சங்கரன், நைல் டிரஸ்ட் நிறுவனர் மகேஸ்வரி உட்பட பலர் பங்கேற்று மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

Tags

Next Story