வீரபாண்டி கல்லுாரியில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு

வீரபாண்டி கல்லுாரியில் போதைக்கு எதிராக விழிப்புணர்வு
X

வீரபாண்டி தேனி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கில் பேரூராட்சி தலைவர் கீதாசசி பேசினார்..

வீரபாண்டி தேனி கலை அறிவியல் கல்லுாரியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.

தேனி மாவட்டம் வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனம் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் தலைவர் S.L.ஜவஹர்லால் அறிவுறுத்தலின் படியும், சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் J.J.கலைவாணி வழிகாட்டுதலின் படியும், தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் P.கனகராஜ் தலைமையில் போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக தேனி மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் சா.சாமுவேல், வீரபாண்டி பேரூராட்சி தலைவர் S.கீதாசசி, சப்-இன்ஸ்பெக்டர் அசோக், வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டு போதைப் பொருள் பற்றிய விழிப்புணர்வு தகவல்களை எடுத்து கூறினார்கள்.

கருத்தரங்கில் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பேராசிரியைகள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் அனைவரும் போதைப் பழக்கத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குனர் P.ராஜதுரை செய்து இருந்தார்.

Tags

Next Story
why is ai important to the future