தேனியில் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு

தேனியில் சாதனை பெண்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
X

தேனி நலம் மருத்துவமனையில் நடந்த மகளிர் தினவிழாவில் நர்ஸ் ஜெயபாத்திமாமேரிக்கு கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி துணைச் செயலாளர் வைஷ்ணவி சாதனை மகளிர்க்கான விருது வழங்கினார். அருகில் நலம் மருத்துவமனை இயக்குனர் வனிதா.

மகளிர் தினத்தை முன்னிட்டு தேனியில் சாதனை பெண்களுக்கு நலம் மருத்துவமனை சார்பில் விருது வழங்கப்பட்டது.

தேனி நலம் மருத்துவமனையில் உலக மகளிர் தினவிழா இயக்குனர் வனிதா தலைமையில் நடந்தது. தேனி ஏ.சி.வி., மில்ஸ் இயக்குனர் சத்தியபாமா, கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரி துணைச் செயலாளர் வைஷ்ணவி முன்னிலை வகித்தனர்.

மகப்பேறு டாக்டர் தனலட்சுமி பெண்களின் நலம் குறித்து விரிவாக பேசினார். தேனி நகர்ப்புற சுகாதார நிலைய நர்ஸ் ஜெயபாத்திமாமேரி, அரைப்படித்தேவன்பட்டி முதியோர் இல்ல காப்பாளர் சடேஷ்வரி ஆகியோருக்கு சாதனை பெண்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

பெண்களுக்கான கோலப்போட்டி, கவிதைப்போட்டி, மருதாணி இடுதல், கழிவுகளில் இருந்து கலைநயம் மிகுந்த பொருட்கள் தயாரித்தல் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற 15 மகளிருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் நலம் மருத்துவமனை பெண் பணியாளர்களால் செய்யப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி