தேனியில் பெர்மிட், எப்.சி. இல்லாத ஆட்டோக்கள்; லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள்

தேனியில் பெர்மிட், எப்.சி. இல்லாத  ஆட்டோக்கள்; லைசென்ஸ் இல்லாத டிரைவர்கள்
X

மாதிரி படம் 

தேனியில் இயக்கப்படும் பெரும்பாலான ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்டு வருவதால் போலீசாருக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது.

தேனி நகர் பகுதியில் மட்டும் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இதில் சரி பாதி அளவு மேக்ஸிகேப் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தேனி போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் இந்த ஆட்டோக்களை ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதில் பெரும்பாலான ஆட்டோக்கள் உரிமம் இல்லாமலும், எப்.சி., இல்லாமலும், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எந்த ஒரு முறையான ஆவணங்கள் இல்லாமலும் இயக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆட்டோ ஓட்டுனர்கள் பெரும்பாலானோருக்கு ஓட்டுனர் உரிமமும் இல்லை. இது போன்ற குறைபாடு உள்ள 100க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

இன்னும் சோதனை தொடரும். முறையான ஆவணங்கள் இல்லாமலும், விதிகளுக்கு உட்படாமலும் இயக்கப்படும் ஆட்டோக்கள் முழுமையாக பறிமுதல் செய்யப்படும். மேக்ஸிகேப் வாகனங்களும் இதே நடைமுறைப்படி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது என ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture